ETV Bharat / sports

ஐஎஸ்எல் 2020-21: இயல்புநிலை இந்தியாவின் மையமாக விளங்கும் கால்பந்து தொடர்! - கரோனா வைரஸ்

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இன்று (நவ.20) தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ISL 2020-21: Football takes centre stage in new normal India

author img

By

Published : Nov 20, 2020, 4:46 PM IST

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், இன்று முதல் கோவாவில் தொடங்கவுள்ளது. இன்று தொடங்கும் ஐஎஸ்எல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது.

மேலும் 2019-20ஆம் ஆண்டிற்கான ஐஎஸ்எல் சீசனின் இறுதிப்போட்டியானது கரோனா ஊரடங்கிற்கு மத்தியில், பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்துவருவதால், இந்த சீசனின் இறுதிப் போட்டியானது, கரோனா வைரஸிலிருந்து மீண்டு இயல்புநிலைக்குத் திரும்பிய இந்தியாவில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இருப்பினும் தற்போதும் கரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற காரணத்தினால் ஐஎஸ்எல் போட்டிகளைப் பார்வையாளர்களின்றி நடத்த ஐஎஸ்எல் கூட்டமைப்புத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி இன்று தொடங்கும் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பாகன் அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பாம்போலியத்திலுள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் இந்தாண்டு 11 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அதிகளவிலான நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இந்தாண்டு ஐஎஸ்எல் சீசன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:நாதியற்று நாறிக்கிடக்கும் சேலம் பெரியார் தெரு - தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.