ETV Bharat / sports

இந்திய மகளிர் கால்பந்து அணி சும்மாவா... கெத்து காட்டிய இந்திய கால்பந்து வீராங்கனைகள்!

author img

By

Published : Mar 22, 2019, 7:33 PM IST

நேபாளம் : தென் ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்திய மகளிர் கால்பந்து அணி கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

கெத்து காட்டிய இந்திய கால்பந்து வீராங்கனைகள்

தென் ஆசிய நாடுகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் 6 நாடுகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில், இந்தியா-நேபாளம் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் இருஅணி வீராங்கனைகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 26-நிமிடத்தில் இந்தியாவின் தலீமா முதல் கோலை அடித்து இந்தியாவின் கணக்கைத் தொடங்க, நேபாள அணி பதிலுக்கு 33-வது நிமிடத்தில் கோல் அடித்து 1-1 என சமன் செய்தது. முதல் பாதியில் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருந்தன.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில், தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெள்ப்படுத்திய இந்திய அணி, ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடிக்க, தொடர்ந்து 78-நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்து 3-1 என முன்னிலைப் பெற்றது.

நேபாளம் அணி மேலும் கோல்கள் அடிக்க முயன்று எதுவும் முடியாததால், இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் தென் ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்திய மகளிர் கால்பந்து அணி வென்று சாதனைப் படைத்தது.

Intro:Body:

Indian womens wins 5th time of south asian football federation

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.