கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீண்டும் போட்டிகளை நடத்தவும், வெளிநாடு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவும் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மகளீர் கால்பந்து அணி வீராங்கனைகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக கோவாவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கிற்கு பிறகு இந்திய மகளீர் கால்பந்து அணி சர்வதேச சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தயாராகி வருகின்றது. அதன் ஒருபகுதியாக உக்ரைன், செர்பியா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்க இந்திய மகளீர் கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.
இந்தச் சுற்றுப்பயணத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி செர்பியா அணியுடனும், பிப்ரவரி 19ஆம் தேதி ரஷ்யா அணியுடனும், பிப்ரவரி 23ஆம் தேதி உக்ரைன் அணியுடனும் இந்திய மகளிர் கால்பந்து அணி விளையாடத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியையும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.
இந்திய மகளீர் கால்பந்து அணி:
கோல் கீப்பர்கள்: மைபம் லிந்தோயிங்கம்பி தேவி, சௌமியா நாராயணசாமி.
டிஃபென்டர்ஸ்: லோய்டோங்பாம் அஷலதா தேவி, நங்க்பாம் ஸ்வீட்டி தேவி, ரிது ராணி, சொரொஹைபம் ரஞ்சனா சானு, வாங்க்கேம் லிந்தோயிங்கம்பி தேவி, கிருதினா தேவி தௌனோஜம்.
மிட்ஃபீல்டர்கள்: மனிஷா, சங்கீதா பாஸ்ஃபோர், சுமித்ரா காமராஜ், பியாரி சாக்சா.
ஃபார்வேர்ட்: அஞ்சு தமாங், இந்துமதி கதிரேசன், சௌமியா குகுலோத், டங்மேய் கிரேஸ், கரிஷ்மா புருஷோத்தம் ஷிர்வோய்கர், சந்தியா ரங்கநாதன், தயா தேவி, சுமதி குமாரி.
இதையும் படிங்க: 'ரசிகர்கள் தான் மைதானங்களின் மிகப்பெரும் பங்குதாரர்கள்' - லக்ஷ்மன், ஜாஃபர் புகழாரம்!