நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022இல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய கண்டங்களுக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் குரூப் இ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்தியா - ஓமன் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில், முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கோல் அடிப்பதற்காக அட்டாக்கிங் முறையில் விளையாடினர். 15 நிமிடத்தில் இந்திய வீரர் உதான்டா சிங் அடித்த கிக் கம்பத்தில் பட்டு விலகியது.
இதைத்தொடர்ந்து, 24ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த ஃப்ரீகிக்கை, பெர்னாண்டஸ் பாஸ் செய்ய அதை கேப்டன் சுனில் சேத்ரி கோலாக மாற்றினார். பின்னர், 81 நிமிடங்கள் வரை ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடிய இந்திய அணி, இறுதி 10 நிமிடத்தில் ஆட்டத்தை ஓமன் வீரர் ரபியா சைத் கையில் தாரைவார்த்தது.
-
FT: IND 🇮🇳 1 - 2 🇴🇲 OMA
— AFC (@theafcdotcom) September 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Oman bounce back in the second half to claim a victory over India in the #AsianQualifiers Round 2 opener in Group E! pic.twitter.com/LX1hwBjsfQ
">FT: IND 🇮🇳 1 - 2 🇴🇲 OMA
— AFC (@theafcdotcom) September 5, 2019
Oman bounce back in the second half to claim a victory over India in the #AsianQualifiers Round 2 opener in Group E! pic.twitter.com/LX1hwBjsfQFT: IND 🇮🇳 1 - 2 🇴🇲 OMA
— AFC (@theafcdotcom) September 5, 2019
Oman bounce back in the second half to claim a victory over India in the #AsianQualifiers Round 2 opener in Group E! pic.twitter.com/LX1hwBjsfQ
82ஆவது நிமிடத்தில் அவர் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமனாக்கினார். இதையடுத்து, 89ஆவது நிமிடத்தில் மீண்டும் அட்டாகசமான முறையில் கோல் அடித்தார். இதனால், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதல் பாதியில் இருந்த வேகத்தை இந்திய அணி இரண்டாம் பாதியில் இழந்துவிட்டதால்தான் இப்போட்டியில் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கத்தார் அணியுடன் வரும் 10ஆம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.