கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது வலிமையான டிஃபென்ஸ் திறனை வெளிப்படுத்தினர். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் நீடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நார்த் ஈஸ்ட் அணியின் அப்பியா, 49ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதையடுத்து இறுதிவரை போராடிய மும்பை அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க இயலவில்லை.
-
FT' | We had to work hard for it and work hard we did! 💪🏻
— NorthEast United FC (@NEUtdFC) November 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
An exemplary performance at the back and @kwes1appiah's calm finish from the spot helps us get one over @MumbaiCityFC 💥#NEUMCFC #StrongerAsOne pic.twitter.com/N3z1aizj8r
">FT' | We had to work hard for it and work hard we did! 💪🏻
— NorthEast United FC (@NEUtdFC) November 21, 2020
An exemplary performance at the back and @kwes1appiah's calm finish from the spot helps us get one over @MumbaiCityFC 💥#NEUMCFC #StrongerAsOne pic.twitter.com/N3z1aizj8rFT' | We had to work hard for it and work hard we did! 💪🏻
— NorthEast United FC (@NEUtdFC) November 21, 2020
An exemplary performance at the back and @kwes1appiah's calm finish from the spot helps us get one over @MumbaiCityFC 💥#NEUMCFC #StrongerAsOne pic.twitter.com/N3z1aizj8r
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி, இந்தச் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:‘கோலிக்கு எதிராக கூடுதல் கவனம் தேவை’ - மார்கஸ் ஸ்டோய்னிஸ்!