2019-20ஆம் ஆண்டுக்கான ஐ லீக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள டி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் ரியல் காஷ்மீர் எஃப்சி அணி நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணியுடன் மோதியது. நடப்பு சீசனில் ரியல் காஷ்மீர் அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி என்பதால் உள்ளூர் ரசிகர்கள் அவர்களுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ரியல் காஷ்மீர் வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் களமிறங்கினர். ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலும், ஏழாவது நிமிடத்திலும் கோல் அடிக்க ரியல் காஷ்மீர் அணிக்குக் கிடைத்த வாய்ப்பு, சென்னை சிட்டி கோல்கீப்பர் நவ்செத் சன்டானாவால் தடுக்கப்பட்டது.
இருப்பினும், மனம் தளராமல் ரியல் காஷ்மீர் வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். குறிப்பாக, 21 ஆவது நிமிடத்தில் டேனிஷ் ஃபரூக் பட் ஹெட்டர் முறையில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே (27ஆவது நிமிடம்) ரியல் காஷ்மீர் வீரர் பாஸி அர்மந்த் ஹெட்டர் முறையில் கோல் அடித்து மிரட்டியதால் காஷ்மீர் ரசிகர்களின் கொண்டாட்டம் இரட்டிப்பானது.
ரியல் காஷ்மீர் அணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் விளையாடிய சென்னை சிட்டி அணி இராண்டாம் பாதி தொடங்கியவுடனே 48ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. சென்னை அணி சார்பில் சையத் சுஹைல் ஹெட்டர் முறையில் கோல் அடித்தார். இறுதியில், ரியல் காஷ்மீர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
-
Danish Farooq and Bazie Armand fired ⚽ ⚽ to continue @realkashmirfc's 💛💙 💯 % winning spree against @ChennaiCityFC 🧡.
— Hero I-League (@ILeagueOfficial) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Catch the highlights 🎥 here.
#HeroILeague 🏆 #IndianFootball ⚽ #LeagueForAll 🤝 #RKFCCCFC ⚔ pic.twitter.com/S8hCpoJO8P
">Danish Farooq and Bazie Armand fired ⚽ ⚽ to continue @realkashmirfc's 💛💙 💯 % winning spree against @ChennaiCityFC 🧡.
— Hero I-League (@ILeagueOfficial) December 26, 2019
Catch the highlights 🎥 here.
#HeroILeague 🏆 #IndianFootball ⚽ #LeagueForAll 🤝 #RKFCCCFC ⚔ pic.twitter.com/S8hCpoJO8PDanish Farooq and Bazie Armand fired ⚽ ⚽ to continue @realkashmirfc's 💛💙 💯 % winning spree against @ChennaiCityFC 🧡.
— Hero I-League (@ILeagueOfficial) December 26, 2019
Catch the highlights 🎥 here.
#HeroILeague 🏆 #IndianFootball ⚽ #LeagueForAll 🤝 #RKFCCCFC ⚔ pic.twitter.com/S8hCpoJO8P
இதன் மூலம், ரியல் காஷ்மீர் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு டிரா என ஐந்து புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், சென்னை சிட்டி எஃப்சி அணி ஐந்து ஆட்டங்களில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெர்மன் கால்பந்து தொடரில் பங்கேற்ற முதல் இந்தியர்!