இங்கிலந்தில் உள்ள கால்பந்து சங்களுக்கு இடையேயான எஃப்.ஏ.கோப்பை கால்பந்து தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்செனல் எஃப்சி அணி - நியூகேசிஸ் யுனைடெட் எஃப்சி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இரு அணிகளும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல்பாதி ஆட்டம் கோலேதுமின்றி சமனில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்கத் தவறியதால், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சமநிலையை வகித்தன. பின்னர் இப்போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக கூடுதல் நேரமாக 30 நிமிடம் வழங்கப்பட்டது.
இதனைச் சரியாகப் பயன்படுத்திய அர்செனல் அணியின் எமிலி ஸ்மித் ஆட்டத்தின் 109ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தார். அதன்பின் ஆட்டத்தின் 117ஆவது பெர்ரி எமிரிக் கோலடித்து அர்செனல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
-
Into the fourth round! ✊#EmiratesFACup 2-0 (AET)
— Arsenal (@Arsenal) January 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Into the fourth round! ✊#EmiratesFACup 2-0 (AET)
— Arsenal (@Arsenal) January 9, 2021Into the fourth round! ✊#EmiratesFACup 2-0 (AET)
— Arsenal (@Arsenal) January 9, 2021
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் அர்செனல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூகேஸில் யுனைடெட் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!