கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தாண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் எப்போது நடைபெறுமென்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது. மேலும், கரோனா வைரஸ் காரணமாக இந்த சீசனுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே நகரில் நடத்தவும் ஐஎஸ்எல் ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
ஐஎஸ்எல் தொடர் குறித்தான ஆலோசனைக் கூட்டம் காணொலி கூட்டரங்கு மூலம் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 2020-21ஆம் ஆண்டிற்கான ஐ.எஸ்.எல் தொடரை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்கலாம் என்றும், தொடரின் அனைத்து போட்டிகளும் கோவாவில் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் நீடா அம்பானி கூறுகையில், “ஐ.எஸ்.எல் தொடரின் ஏழாவது சீசனை இந்தாண்டு நவம்பர் மாதம் முதல் கோவாவில் நடத்த ஐ.எஸ்.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசனின் அனைத்து போட்டிகளும் ஜவஹர்லால் நேரு மைதானம் (ஃபடோர்டா), ஜிஎம்சி தடகள மைதானம் (பாம்போலிம்), திலக் மைதன் மைதானம் (வாஸ்கோ) ஆகிய மூன்று இடங்களில் பார்வையாளர்களின்றி நடைபெறும்.
மேலும் எஃப்.எஸ்.டி.எல், கோவா விளையாட்டு அமைச்சகம், கோவா கால்பந்து சங்கத்துடன் இணைந்து பாதுகாப்பான சீசனை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி மைதானத்தின் பாதுகாப்பு, வீரர்களின் ஓய்வறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை செயல்படுத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
-
𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓
— Indian Super League (@IndSuperLeague) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Goa to host #HeroISL 2020-21 🏟️
More details 👉 https://t.co/biTAM8ijKO#LetsFootballGoa pic.twitter.com/MoNVqAiJIs
">𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓
— Indian Super League (@IndSuperLeague) August 16, 2020
Goa to host #HeroISL 2020-21 🏟️
More details 👉 https://t.co/biTAM8ijKO#LetsFootballGoa pic.twitter.com/MoNVqAiJIs𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓
— Indian Super League (@IndSuperLeague) August 16, 2020
Goa to host #HeroISL 2020-21 🏟️
More details 👉 https://t.co/biTAM8ijKO#LetsFootballGoa pic.twitter.com/MoNVqAiJIs
முன்னதாக, ஐ.எஸ்.எல் தொடரின் ஆறாவது சீசன் கோவாவிலுள்ள ஜவஹர்லால் நேரு கால்பந்து மைதானத்தில் பார்வையாளர்களின்றி நடைபெற்றது. மேலும், அப்போட்டியில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி எஃப்.சி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐ.எஸ்.எல் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:''உங்கள் பயணத்தில் நானும் இணைந்துகொள்கிறேன்'' தோனியுடன் ஓய்வை அறிவித்த ரெய்னா!