ETV Bharat / sports

6 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் வீழ்ந்த போர்ச்சுகல்! - போர்ச்சுகல் vs ஃபிரான்ஸ்

லிஸ்பான்: நேஷன்ஸ் லீக் குரூப் போட்டியில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸ் அணி வீழ்த்தியது.

france-beats-portugal-clinches-nations-league-finals-spot

author img

By

Published : Nov 15, 2020, 6:26 PM IST

யுஈஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் லீக் ஏ குரூப் 3 பிரிவில் ஃபிரான்ஸ், போர்ச்சுகள் அணிகள் இடம்பெற்றிருந்தது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி லிஸ்பான் மைதானத்தில் நடந்தது.

இதன் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்கள் கோல்கள் எதுவும் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியின் 54ஆவது நிமிடத்தில் கோலோ கான்ட் ஃபிரான்ஸ் அணிக்காக முதல் கோலை அடித்தார். இதன்மூலம் ஃபிரான்ஸ் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. இதன்பின்னர் இறுதி வரை போர்ச்சுகல் வீரர்கள் யாரும் கோல் அடிக்காததால், ஃபிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின்மூலம் ஃபிரான்ஸ் அணி குரூப் 3 புள்ளிப்பட்டியலில் போர்ச்சுகலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு முதல் பாதியின் முடிவில் கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் போர்ச்சுகல் அணியின் வெற்றிவாய்ப்பை இன்னும் பாதித்தது. மேலும் 6 ஆண்டுகளில் போர்ச்சுகல் அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்திராத நிலையில், இன்று ஃபிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

ரொனால்டோ
ரொனால்டோ

இந்தத் தோல்வி குறித்து போர்ச்சுகல் அணியின் மேனேஜர் சாண்டோஸ் கூறுகையில், '' நாங்கள் ஃபிரான்ஸ் அணிக்கு எதிரான கடினமான உணர்ந்தோம். முதல் பாதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணி எங்களை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாம் பாதியில் நன்றாக ஆடினோம். ஆனால் எதுவும் எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை'' என்றார்.

இதையும் படிங்க: பிபிஎல் 10: சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிராத்வெய்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.