உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட்-19 தொற்றால் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐரோப்பா கண்டங்களான இத்தாலி, ஸ்பெயினில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.
இந்த நிலையில், கோவிட்-19 தொற்றால் ஃபிரான்ஸின் ஒலிம்பிக் டி மார்சேய் கால்பந்து கிளப் அணியின் முன்னாள் தலைவர் பப்பே டியிஃப், செனகல் நாட்டில் உள்ள டக்கர் மருத்துவமனையில், சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவந்தார். திடீரென இவரது உடல்நலம் மோசமானதால் விமான சேவை மூலம் மேல்சிகிச்சைக்காக ஃபிரான்ஸின் நைஸ் நகருக்கு செல்லவிருந்தார்.
ஆனால், விமானம் புறப்படுவதற்கு முன்னதாகவே இவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 68. பப்பே டியிஃப் ஆப்பிரிக்க கண்டமான சாட் நாட்டில் பிறந்திருந்தாலும் அவருக்கு செனகல், ஃபிரான்ஸ் என இரட்டைக் குடியுரிமை உள்ளது. 2005 முதல் 2009 வரை ஃபிரான்ஸின் ஒலிம்பிக் டி மார்சேய் கால்பந்து கிளப் அணியின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
ஏற்கனவே கோவிட் -19 தொற்றால் சோமாலியாவின் முன்னாள் கால்பந்து வீரர் முகமது ஃப்ரா, 21 வயது ஸ்பெயின் வீரர் பிரான்சிஸ்கோ கார்சி ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது அதே துறை சார்ந்த மற்றொருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: புடினுக்கு கைகொடுத்த மருத்துவருக்கு கரோனா: அதிர்ச்சியில் ரஷ்யா!