கரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் நடக்கவிருந்த கால்பந்து தொடர்கள் முடிவடைவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஏதுவாக சர்வதேச கால்பந்து சம்மேளனங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக 2020-21 ஆண்டு சீசன்களிலும் போட்டியின்போது ஒரு அணியில் 5 மாற்று வீரர்களை அனுமதிப்பது தொடர்பான விதியை நீட்டித்து ஃபிஃபா உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரோடு நடத்திய ஆலோசனையில் கரோனா வைரசால் நடப்பாண்டு தொடர்களைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது என்று தெரிகிறது.
இதனால் சர்வதேச கால்பந்து சங்கம் சார்பாக 2020-21 ஆண்டு கால்பந்து சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் 5 மாற்று வீரர்களை அனுமதிக்கும் விதி 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து வீரர்கள் தங்களது ஃபிட்னெஸை நிரூபிக்க தேவையான நேரத்தை வழங்குவதற்காகவே இந்த விதியில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மான்செஸ்டர் சிட்டி அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!