இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்.சி கோவா அணி, ஜாம்ஷெத்பூர் எஃப்.சி அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய கோவா அணியின் கோரோமினஸ் ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். ஆனால் தொடர்ந்து போராடிய ஜாம்ஷெத்பூர் அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாததால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 70ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பவுமஸ் ஒருகோலடிக்க, அவரைத் தொடர்ந்து ஜாக்கிசந்த் சிங் ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்திலும், மொர்டடா ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்திலும் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
-
History is written by the victors! 🙌
— Indian Super League (@IndSuperLeague) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch our #ISLRecap on how @FCGoaOfficial became the #HeroISLLeagueWinners
Full highlights 👉 https://t.co/GqbCTqPovH#JFCFCG #HeroISL #LetsFootball pic.twitter.com/A875G0qj2t
">History is written by the victors! 🙌
— Indian Super League (@IndSuperLeague) February 19, 2020
Watch our #ISLRecap on how @FCGoaOfficial became the #HeroISLLeagueWinners
Full highlights 👉 https://t.co/GqbCTqPovH#JFCFCG #HeroISL #LetsFootball pic.twitter.com/A875G0qj2tHistory is written by the victors! 🙌
— Indian Super League (@IndSuperLeague) February 19, 2020
Watch our #ISLRecap on how @FCGoaOfficial became the #HeroISLLeagueWinners
Full highlights 👉 https://t.co/GqbCTqPovH#JFCFCG #HeroISL #LetsFootball pic.twitter.com/A875G0qj2t
இதனையடுத்து பவுமஸ் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மீண்டுமொரு கோலடிக்க கோவா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெத்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் போட்டிகளுக்கு தகுதிபெற்று கோவா எஃப்.சி அணி சாதனைப் படைத்துள்ளது.
இதையும் படிங்க: யு17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: மும்பையில் இறுதி போட்டி!