ETV Bharat / sports

கால்பந்து: பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் இன்று பலப்பரீட்சை

author img

By

Published : Apr 16, 2019, 2:59 PM IST

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் நட்சத்திர அணிகளான பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன.

பார்சிலோனா - மான்சஸ்டர் யுனைடெட் இன்று பலப்பரீட்சை

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில், ஸ்பெயினின் பார்சிலோனா - இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டி பார்சிலோனாவின் கேம்ப் நெள மைதானத்தில் நடைபெறுகிறது.

முன்னதாக, ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கம்பேக்:

இதனால், இன்றைய ஆட்டத்தில் பார்சிலோனா அணி ஒரு கோல் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்குகிறது. சொந்த மைதானத்தில் எப்போதும் பார்சிலோனா அணி தனது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அதேசமயம், இந்தத் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி எதிரிணியின் மண்ணில் அதிக கோல்களை அடித்து கம்பேக் தந்துள்ளது.

குறிப்பாக, நாக் சுற்றுப் போட்டியில் அந்த அணி பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியை அவர்களது சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதைத்தவிர, இந்த தொடரில் அந்த அணி அடித்த 10 கோல்களில் எதிரணி மண்ணில் மட்டும் 9 கோல்களை அடித்துள்ளனர்.

BARCAMUFC
பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட்

இதனால், இன்றைய போட்டியில் பார்சிலோனாவின் கேம்ப் நெள மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்சிலோனைவிட அதிகமான கோல் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி ரசிகர்கள் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பார்சிலோனா வீரர்களுக்கும் அழுத்தம் தந்து விளையாடுவார்கள் என கருதப்படுகிறது.

பார்சிலோனாவின் ஆதிக்கம்:

முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி, டிஃபென்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. அதன் பலனாக, மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் கம்பத்தை நோக்கி ஒரு ஷாட்டைக் கூட அடிக்கமுடியாத அவலம் ஏற்பட்டது.

பார்சிலோனா அணியை பொறுத்த வரையில் பந்தை தன் வசப்படுத்தி ஆடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இன்றைய போட்டியிலும் அந்த அணி இதே உக்தியை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மெஸ்ஸி,சுவாரஸ், டெம்பள்ளே, புஸ்கட்ஸ், ரகிடிச் ஆகியோரது ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது

கடந்த மூன்று சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி காலிறுதிச் சுற்றுலேயே நடையைக் கட்டியுள்ளது. அதனால், இன்றைய போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பார்கள் என தெரிகிறது.

இவ்விரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் அனல்பறக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மான்செஸ்டர் அணியின் பிரெஸ்ஸிங் கேமிற்கு பார்சிலோனா அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் கால்பந்து வல்லுநர்களிடையே அதிகரித்துள்ளது.

Intro:Body:

SPORTS

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.