ETV Bharat / sports

'இந்திய கால்பந்து வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' - மார்க்வெஸ்

இந்திய கால்பந்து வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக ஹைதராபாத் எஃப்சி அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க்வெஸ் தெரிவித்தார்.

author img

By

Published : Nov 23, 2020, 4:10 PM IST

EXCLUSIVE: Indian footballers have good future, says Hyd FC coach Marquez

கரோனா அச்சுறுதலுக்கு மத்தியில் இந்தியாவின் உள்ளூர் கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்துவருகிறது.

இத்தொடரின் இன்று நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டிக்கு முன்னதாக ஹைதராபாத் எஃப்சி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டின் மானுவல் மார்க்வெஸ், ஈடிவி பாரத்தின் பிரத்யேக நேர்காணலில் பங்கேற்றார்.

மானுவல் மார்க்வெஸ்
ஹைதராபாத் எஃப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் மானுவல் மார்க்வெஸ்

மானுவல் மார்க்வெஸின் பிரத்யேக நேர்காணல் இதோ..

கேள்வி: முதல் முறையாக நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளீர்கள். இந்த சீசனில் உங்கள் அணி வீரர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மார்க்வெஸ்: நீங்கள் ஒரு புதிய கால்பந்து கிளப்பில் சேரும்போது பல சவால்களைச் சந்தித்தாக வேண்டும். ஏனெனில் உங்களது முதல் போட்டியிலிருந்தே சிறந்த ஆட்டத்தை நீங்கள் தர வேண்டும். மேலும் அணி வீரர்கள், ஊழியர்களின் கூட்டுமுயற்சியை ஊக்குவிப்பது அவசியமான ஒன்றாகும். கால்பந்து விளையாட்டில் எதையும் உறுதியாக கூறிவிட முடியாது. ஆனால் எங்களது அணியினர் மீது நம்பிக்கை உள்ளது.

ரோஹித் தானு, ஆகாஷ் மிஸ்ரா, லால்பியாக்லுவா

அதேசமயம் எங்களது அணியில் ரோஹித் தானு, ஆகாஷ் மிஸ்ரா, லால்பியாக்லுவா, லாலம்பூயா, ஃபெர்னாண்டஸ் போன்ற பல இளம் வீரர்கள் உள்ளனர். இந்தத் திறமையான வீரர்கள் எங்களிடம் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களின் திறமைகளை நாங்கள் இந்த சீசனில் காண விரும்புகிறோம். அதனால் இந்த சீசனில் அவர்கள் அணியின் முக்கிய வீரர்களாக மாறும் திறன் உள்ளது.

கேள்வி: இந்தாண்டு ஐஎஸ்எல் போட்டிகள் அனைத்து கோவாவின் மூன்று மைதானங்களில் மட்டும் நடைபெறவுள்ளது. இதனால் ஹைதராபாத் எஃப்சி அணிக்கு சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது. சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு இல்லை என்ற பயத்தை வீரர்களிடமிருந்து போக்க உங்களது திட்டம் என்ன?

மார்க்வெஸ்: எந்தவொரு கால்பந்து கிளப்பிற்கும் ரசிகர்கள் மிக முக்கியமானவர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு வெற்று அரங்கத்தில் விளையாடுகிறீர்கள் என்றால், அது மிகவும் மோசமானதாக இருக்கும். ஏனெனில் அங்கு மக்களின் ஆரவாரமின்றி காணப்படும். ஆனால் இந்தக் கரோனா சூழ்நிலையில் இதனை மட்டுமே செய்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பையும் இழந்துள்ளோம். ஏனெனில் சொந்த மைதானத்தில் விளையாடுவது ஒவ்வொரு அணிக்கும் பெரும் பலனாக அமையும்.

கேள்வி: கரோனா ஊரடங்கின் காரணமாக வீரர்கள் தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ள போதிய நேரம் கிடைக்கவில்லை. தற்போது சீசனும் தொடங்கியதால், குறுகிய நேரத்தில் வீரர்களுக்கான பயிற்சியை ஒழுங்கமைப்பது எவ்வளவு கடினம்?

மார்க்வெஸ்: அது மிகவும் கடினமான ஒன்று. அதனால்தான் ஒவ்வொரு அணிக்கும் லீக்கின் முதல் சுற்று முக்கியமானதாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையிலும், முதல் ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் சீசனின் தொடக்கத்திலேயே வெற்றியைப் பெறுவது நல்லது. அதனால்தான் நாங்கள் முதல் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எங்களது பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். மேலும் மிகச்சிறந்த அணிகளுடன் பயிற்சி போட்டிகளிலும் ஈடுபட்டுவருகிறோம்.

பயிற்சி போட்டிகளின் போது
பயிற்சி போட்டிகளின்போது

கேள்வி: இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு ‘பயோ பபுள்’ சூழலில் இருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பயிற்சிகளில் பின்தங்கியுள்ள வீரர்களுக்கு இது கடுமையான சவாலாக இருக்கும். இந்தச் சவாலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

மார்க்வெஸ்: நாம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இத்தகைய சூழலில் எங்களால் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடிகிறது. இருப்பினும் நாங்கள் அனைவரும் எங்களது குடும்பங்களுடன் இருப்பதை தவிர்க்க வேண்டியுள்ளது. இத்தகைய நிலைமை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் கடினமான ஒன்று. இருப்பினும் இச்சூழல் நம்மை பலப்படுத்த உதவும். இது ஒரு சாதாரண நிலைமை அல்ல; இது நம் அனைவருக்கும் புதிதான ஒன்று. இச்சூழல் விரைவில் மாறும் என்பதை நம்புவோம்.

கேள்வி: ஒடிசா எஃப்சி அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணியின் வீரர்களுக்கான அணி அமைப்பு என்னவாக இருக்கும்?

மார்க்வெஸ்: அதனை இப்போது சொல்வது கடினம். ஏனெனில் தற்போது எங்கள் அணியின் ஃபிரான் சந்தாசா, டிம்பிள் பகர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். அதனால் பயிற்சியில் சிறப்பாகச் செயல்படும் எஞ்சியுள்ள வீரர்களைப் பார்த்து, அதற்கேற்ப அணியைத் தேர்ந்தெடுப்போம். இருப்பினும் ஒடிசா அணியுடனான எங்களது முதல் ஆட்டம் மிக முக்கியமானது. அதனால் அன்றைய போட்டிக்கான அணியை சிறந்தாகவே தேர்வுசெய்வோம்.

ஹைதராபாத் எஃப்சி
ஹைதராபாத் எஃப்சி

கேள்வி: நீங்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக இந்திய கால்பந்து குறித்த உங்கள் பார்வை என்ன? முதலில் இந்தியா கால்பந்து விளையாடுவதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா?

மார்க்வெஸ்: இந்திய வீரர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது இல்லை. ஆனால் ஒரு சில ஸ்பானிஷ் வீரர்களை நான் அறிவேன். அவர்கள் இங்கு நீண்ட காலமாக விளையாடுகிறார்கள். இந்திய கால்பந்து பற்றிய நான் அறிவதற்கு அவர்கள் எனக்கு உதவியுள்ளனர். ஆனால் சில மூத்த இந்திய வீரர்களின் கடின உழைப்பைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். மேலும் இந்தியாவில் உள்ள இளம் கால்பந்து வீரர்களுக்கு மிகப்பெரும் எதிர்காலம் உள்ளது என நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க:ஏடிபி ஃபைனல்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.