ETV Bharat / sports

#LaLiga2019: கோல் கணக்கைத் தொடங்கிய ரூ.786 கோடிக்கு ஒப்பந்தமான ஹசார்டு! - Eden Hazard Goal against Granada FC

லா லிகா கால்பந்துத் தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்டு தனது முதல் கோலைப் பதிவு செய்துள்ளார்.

Eden Hazard
author img

By

Published : Oct 6, 2019, 6:45 PM IST

ஸ்பெயினில் நடப்பு சீசனுக்கான (2019-20) லா லிகா கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனில், 786 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் செல்சீ அணியிலிருந்து ரியல் மாட்ரிட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்டு, ரொனால்டோ விட்டுச்சென்ற வெற்றிடத்தை பூர்த்தி செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: #UCL: ரியல் மாட்ரிட்டுக்கு என்னதான் ஆச்சு...!

ஆனால், நடைபெற்றுவரும் லா லிகா கால்பந்துத் தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் இதுவரை ஒரு கோலும் அடிக்காததால், அவர் ஆட்டத்தின் மீது ரியல் மாட்ரிட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் கிரனாடா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், ரியல் மாட்ரிட் அணி விளையாடிய எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றி, மூன்று டிரா என 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

  • Saturday, October 5 2019
    14:45 GMT
    Real Madrid Vs Granada
    Santiago Bernabéu Stadium,Madrid, Spain
    45:47
    Eden Hazard scored his first goal in La Liga 😍 pic.twitter.com/LvJPOWWTc8

    — Aram Madridista (@IamRiriMo) October 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்போட்டியின் முதல் பாதி முடியும் தருணத்தில், ஈடன் ஹசார்டு சிப் (chip) முறையில் பந்தை லாவகமாக கோல்கீப்பர் தலைக்கு மேல் அடித்து கோலாக்கினார். இதன்மூலம், லா லிகா கால்பந்து தொடரில் ஹசார்டு தனது முதல் கோலை பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்த கோலின் மூலம் நம்பிக்கை பெற்ற ஹசார்டு இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பார்சிலோனா இளம் வீரரின் அசால்ட் கோல்!

Intro:Body:

Real Madrid won Laliga match

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.