ஓய்வுபெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனா மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லியோபோல்டோ லுக் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், எதிர்பாரதவகையில் மரடோனா அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில மனரீதியான குழப்பங்களை எதிர்கொள்வதாகவும், சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற வேண்டும் என்றும் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் லியோபோல்டோ லுக் ட்வீட் செய்துள்ளார்.