ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து (Euro 2020) போட்டித் தொடர், தற்போது நடைபெற்றுவருகிறது. இத்தொடர் நாக் ஆவுட் கட்டத்திற்கு வந்துள்ள நிலையில், நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
டென்மார்க் அபார வெற்றி
ரவுண்ட் ஆப்-16 முதல் போட்டியில் வேல்ஸ் அணி டென்மார்க் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் டென்மார் அணி வீரர் கேஸ்பர் டோல்பெர்க் அணிக்கு முதல் கோலை தேடித்தந்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்றக் கணக்கில் டென்மார்க் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் டென்மார்க் அணி கோல் மழை பொழிய ஆரம்பித்தது. 48 ஆவது நிமிடத்தில் டோல்பெர்க் அணிக்கு இரண்டாவது கோலை அடித்தார். அதன் பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களான 88, 90ஆவது நிமிடங்களில் ஜோவாக்கிம், மார்ட்டின் பிராத்வெய்ட் முறையே மூன்றாவது, நான்காவது கோல்களை அடித்தனர்.
-
🇩🇰🎉
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
✅ First side to score four goals in successive EURO finals matches
ℹ️ Biggest EURO finals win since 1984 #EURO2020 pic.twitter.com/jZ7XkNWTrM
">🇩🇰🎉
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021
✅ First side to score four goals in successive EURO finals matches
ℹ️ Biggest EURO finals win since 1984 #EURO2020 pic.twitter.com/jZ7XkNWTrM🇩🇰🎉
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021
✅ First side to score four goals in successive EURO finals matches
ℹ️ Biggest EURO finals win since 1984 #EURO2020 pic.twitter.com/jZ7XkNWTrM
இறுதியில் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்று டென்மார்க் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. செக்-நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டியின் வெற்றியாளரை டென்மார்க் காலிறுதியில் சந்திக்கவுள்ளது.
இதையும் படிங்க: வில்வித்தையில் மூன்று தங்கம் குவித்த இந்தியா!