டூரின் (இத்தாலி): போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் கிளப் அணியான ஜுவன்டஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஜுவென்டஸ் அணியின் பயிற்சியாளர் மாக்சிமிலியன் அலெக்ரி, இன்று (ஆக. 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறிய அவர், "ஜூவென்டஸில் தொடர்ந்து விளையாட தனக்கு எண்ணமில்லை என நேற்று (ஆக. 26) ரொனால்டோ என்னிடம் கூறினார். இதனால், எம்போலி அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ களமிறங்க மாட்டார்" என தெரிவித்துள்ளார்.
எது வேண்டுமானாலும் நடக்கலாம்
இதையடுத்து, ரொனால்டோ இங்கிலாந்தின் மற்றொரு அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் கார்டியோலா கூறுகையில், " கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போதுவரை ஜுவென்டஸ் அணியில்தான் இருக்கிறார். வீரர்கள் அணி மாறும் நடைமுறை இன்னும் முன்று, நான்கு நாள்கள் இருப்பதால், தற்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றார்.
ஹோம் கம்மிங்
மேலும், ரொனால்டோ தனது முந்தைய பயிற்சியாளரான சர் அலெக்ஸ் பெர்குசனிடம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்புவது குறித்து பேசிய பின்னர், மான்செஸ்டர் யுனைடெட் அணி அவருக்கு ஒப்பந்தம் ஒன்றை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: LEEDS TEST: பொறுமை காட்டும் ரோஹித் - புஜாரா இணை