கால்பந்து விளையாட்டில் ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 2009இல் இருந்து 2018 மே வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவந்த அவர், 2018 ஜூன் மாதத்தில் இருந்து இத்தாலியின் யுவண்டஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
'கற்றோர்க்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு' என்ற பழமொழிக்கு ஏற்றது போல, ரொனால்டோ தனது சிறப்பான ஆட்டத்தை இத்தாலியிலும் வெளிப்படுத்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தால், யுவண்டஸ் அணி சீரி ஏ கால்பந்து தொடரில் அதிகமான போட்டிகளில் வெற்றிபெற்றது.
-
Very happy to win the second trophie for @juventusfc and my first Serie A championship!🏆 #finoallafine pic.twitter.com/CPWToe8JiJ
— Cristiano Ronaldo (@Cristiano) May 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Very happy to win the second trophie for @juventusfc and my first Serie A championship!🏆 #finoallafine pic.twitter.com/CPWToe8JiJ
— Cristiano Ronaldo (@Cristiano) May 19, 2019Very happy to win the second trophie for @juventusfc and my first Serie A championship!🏆 #finoallafine pic.twitter.com/CPWToe8JiJ
— Cristiano Ronaldo (@Cristiano) May 19, 2019
தற்போது, சீரி ஏ கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், 36 போட்டிகளில் விளையாடிய நடப்பு சாம்பியன் யுவண்டஸ் அணி 28 வெற்றி, 5 டிரா, 3 தோல்வி என 89 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனால், புள்ளிகள் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சீரி ஏ கால்பந்து பட்டத்தை யுவண்டஸ் அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இந்த சீசனில் 21 கோல், 8 அசிஸ்ட் என அணிக்காக சிறப்பாக விளையாடிய ரொனால்டோவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த சீரி ஏ வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.