கிரிக்கெட் விளையாட்டில் களத்திலிருக்கும் வீரர்களுக்கு தலையில் அடிபட்டால், அவர்களுக்கு மாற்று வீரராக மற்றொருவரை களமிறக்கலாம் என்னும் விதியை ஐசிசி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அதன்படி களமிறங்கும் வீரர் பேட்டிங், பந்துவீச்சில் அணிக்கு உதவலாம் என்பதே இந்த கன்கஷன் மாற்றுவீரர். இந்த விதியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசாக்னே, இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் மாற்று வீரர்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்து விளையாட்டிலும் இவ்விதியைப் பயன்படுத்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் சமீபத்தில் நடந்த வருடாந்திர கூட்டத்தில், அடுத்த ஆண்டு முதல் கால்பந்து விளையாட்டிலும் கன்கஷன் மாற்றுவீரர் முறையை சோதனை முடிவுசெய்யப்பட்டுள்ளது.
-
Annual Business Meeting 2020: IFAB approves trials with additional concussion substitutes
— The IFAB (@TheIFAB) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
➡️ Media release: https://t.co/k2yFvTSVp1 pic.twitter.com/RxKmyiCWKD
">Annual Business Meeting 2020: IFAB approves trials with additional concussion substitutes
— The IFAB (@TheIFAB) December 16, 2020
➡️ Media release: https://t.co/k2yFvTSVp1 pic.twitter.com/RxKmyiCWKDAnnual Business Meeting 2020: IFAB approves trials with additional concussion substitutes
— The IFAB (@TheIFAB) December 16, 2020
➡️ Media release: https://t.co/k2yFvTSVp1 pic.twitter.com/RxKmyiCWKD
இது குறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கால்பந்து விளையாட்டில் அடிபடும் வீரர்களின் பாதுகாப்பு கருதி, கன்கஷன் மாற்று வீரரை அனுமதிக்கலாம் என்ற விதிமுறைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்ததனர்” எனக் கூறியுள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சர்வதேச மற்றும் உள்ளூர் கால்பந்து தொடர்களில் கன்கஷன் மாற்றுவீரர் விதியின் சோதனை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் லெவாண்டோவ்ஸ்கி!