கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக வலம்வருபவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2003ஆம் ஆண்டில் கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம், தனது 18 வயதில் சர்வதேச கால்பந்து விளையாட்டில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை போர்ச்சுகல் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
அதேசமயம், ஸ்போர்டிங் சி.பி (போர்ச்சுகல்), மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) ஆகிய கிளப் அணிகளில் விளையாடி பல்வேறு கோப்பைகளையும் சாதனைகளையும் படைத்த இவர், தற்போது யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். தற்போது அவருக்கு 34 வயதானாலும் இளம் வீரர்களைப் போல விளையாடிவருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் போர்ச்சுகல் அணி 2016இல் யூரோ கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள யூரோ கோப்பைத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான போட்டியில் போர்ச்சுகல் அணி, உக்ரைனுடன் மோதியது. இதில், 72ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்தார். இதன் மூலம், சர்வதேச, கிளப் அளவிலான போட்டிகளில் 700 கோல்களை அடித்த ஆறாவது வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.
இவருக்கு முன்னதாக, ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர், நெதர்லாந்தின் புஸ்கஸ், பிரேசிலின் பீலே, ரோமரியோ, செக் குடியரசின் ஜோசஃப் பிகான் ஆகியோர் இச்சாதனையை எட்டியுள்ளனர். இருப்பினும், தற்போது கால்பந்து விளையாடும் வீரர்களில் 700 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி 672 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதேசமயம், போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ அடித்த 95ஆவது கோல் இதுவாகும். இதன் மூலம், சர்வேதச அளவிலான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ இரண்டாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில், ஈரான் வீரர் அலி தேய் 109 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். விரைவில் ரொனால்டோ இவரது சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரொனால்டோ இப்போட்டியில் கோல் அடித்தும் போர்ச்சுகல் அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
-
7️⃣0️⃣0️⃣ career goals for @Cristiano 🔥 pic.twitter.com/Weyi4U3jRW
— Dugout (@Dugout) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">7️⃣0️⃣0️⃣ career goals for @Cristiano 🔥 pic.twitter.com/Weyi4U3jRW
— Dugout (@Dugout) October 14, 20197️⃣0️⃣0️⃣ career goals for @Cristiano 🔥 pic.twitter.com/Weyi4U3jRW
— Dugout (@Dugout) October 14, 2019
ரொனால்டோவின் கோல்கள் விவரம்:
- போர்ச்சுகல் (95)
- ஸ்போர்டிங் சி.பி (5)
- மான்செஸ்டர் யுனைடெட் (118)
- ரியல் மாட்ரிட் (450)
- யுவென்டஸ் (32)