ETV Bharat / sports

சூப்பர் கோப்பை கால்பந்து : பெங்களூருவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை சிட்டி!

ஒடிஷா: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், பெங்களூரு எஃப்.சி. அணியை வீழ்த்தி சென்னை சிட்டி எஃப்.சி. அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

சென்னை சிட்டி
author img

By

Published : Apr 5, 2019, 5:21 PM IST

2019ஆம் ஆண்டுக்கான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் காலிறுதிப் போட்டியில், சென்னை சிட்டி எஃப்.சி - பெங்களூரு எஃப்.சி அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அதிரடியான ஆட்டத்தை சென்னை சிட்டி அணி வீரர்கள் வெளிப்படுத்த, இதன் பலனாக 15-வது நிமிடத்தில் நெஸ்டர் ஜீஸஸ் முதல் கோல் அடிக்க, சென்னை சிட்டி அணி முன்னிலை பெற்றது.

பின்னர் பெங்களூரு அணி தடுப்பாட்டத்தில் ஈடுபட முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-0 என்ற கணக்கில் சென்னை சிட்டி அணி முன்னிலைப் பெற்றது.

பின்னர் ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் பெங்களூரு அணி கேப்டன் சுனில் சேத்திரி, தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிட, அதனைத் தொடர்ந்து 55வது நிமிடத்தில் சென்னை சிட்டி வீரர் பெட்ரோ இரண்டாவது கோலை அடித்தார்.

இதற்கு பதிலடியாக 65வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்திரி முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் 2-1 என்ற கணக்கில் சென்னை சிட்டி அணி பெங்களூருவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சிட்டி எஃப்.சி. அணி, சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.