உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 48 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு மக்கள் அனைவரையும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள்விடுத்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான செல்சியின் நட்சத்திர வீரர் கலும் ஹட்சன்-ஓடோய் நேற்று அதிகாலை தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மாடல் நடிகையை தனது வீட்டிற்கு வரும்படி கார் அனுப்பியதன் விளைவாக கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து காவல் துறையினர் கூறுகையில், "நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் ஹட்சன், ஊரடங்கினால் அரசு அறிவுறுத்திய தகுந்த இடைவெளி விதிகளை மீறி மாடல் நடிகையை தனது வீட்டிற்கு வர ஒரு காரை அனுப்பியதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினரால் ஹட்சன் கைதுசெய்யப்பட்டார்" என்று தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் கோவிட்-19 பெருந்தொற்று கண்டறியப்பட்ட முதல் விளையாட்டு வீரர் ஹட்சன் ஓடோய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'நான் ரெய்னா ரசிகன்...' - மனம்திறந்த ஜான்டி ரோட்ஸ்!