ETV Bharat / sports

ஐஎஸ்எல்: ஈஸ்ட் பெங்காலை பந்தாடியது மும்பை சிட்டி எஃப்சி! - ஈஸ்ட் பெங்கால்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Boumous, Le Fondre star as Mumbai City FC thrash SC East Bengal 3-0

author img

By

Published : Dec 1, 2020, 10:48 PM IST

கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதில் இன்று (டிச.01) நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் தொடக்கம் முதலே மும்பை சிட்டி எஃப்சி அணி ஆதிக்கம் செலுத்திவந்தது. அதன் விளைவாக ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ஆடம் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ஆடம் ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டுமொரு கோலடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து மும்பை அணியின் நட்சத்திர வீரர் சாந்தனா அட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதிவரை போராடிய ஈஸ்ட் பெங்கால் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க இயலவில்லை. இதன் மூலம் மும்பை சிட்டி எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:AUS vs IND : ஒயிட் வாஷைத் தவிர்க்குமா இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.