லாலிகா கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - ஈபார் எஃப்சி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற வீதம் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது பார்சிலோனா அணியின் நட்சத்திர மிட் ஃபீல்டர் பிலிப்பே கொடின்ஹோ தனது கால் பகுதியில் காயமடைந்தார். பின்னர் களத்திலிருந்து வெளியேறிய கொடின்ஹோ, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், கொடின்ஹோவின் கால் மூட்டின் உள் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆர்த்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக பார்சிலோனா அணி தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பார்சிலோனா அணியின் அன்சு ஃபாத்தி, ஜெரார்ட் பிக் ஆகியோர் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது பிலிப்பே கொடின்ஹோவும் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து ஈடன் கார்டனை பார்வையிட்ட கங்குலி!