கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் ஒவ்வொரு சீசன்களிலும் உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய அணிகளின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில், 2018-19 சீசனில் உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய அணிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், 2017-18 சீசனில் அதிக வருவாய் ஈட்டிய ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியின் சாதனையை முறியடித்து பார்சிலோனா அணி 841 மில்லியன் யூரோக்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 ஆயிரத்து 633 கோடி ஆகும்.
இதன் மூலம் பார்சிலோனா அணி, ஒரு சீசனில் 800 மில்லியன் யூரோக்களை சம்பாதித்த முதல் அணி என்ற சாதனையை படைத்து, உலகின் பணக்கார கிளப் அணியாக விளங்குகிறது. மேலும், பார்சிலோனா அணியின் 2017-18 சீசனின் வருவாயை உடன் ஒப்பிடுகையில் 2018-19 சீசனின் வருவாய் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதில் விளம்பரங்களின் மூலம் 383.5 மில்லயன் யூரோக்களும் ஒளிப்பரப்பின் மூலம் 298 மில்லியன் யூரோக்களையும் வருவாயாக பார்சிலோனா அணி ஈட்டியுள்ளது. இப்பட்டியலில் பார்சிலோனா அணிக்கு அடுத்தப்படியாக, ரியல் மாட்ரிட் அணி 757 மில்லியன் யூரோக்கள் வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்திலும், மான்செஸ்டர் யுனைடெட் அணி 712 மில்லயன் யூரோக்கள் வருவாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
2018-19 சீசன்களில் அதிக வருவாய் ஈட்டி அணிகள்:
- பார்சிலோனா (ஸ்பெயின்) - 841 மில்லியன் யூரோ
- ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) - 757 மில்லியன் யூரோ
- மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து) - 712 மில்லியன் யூரோ
- பேயர்ன் முனிச் (ஜெர்மனி) - 660 மில்லியன் யூரோ
- பாரிஸ் செயின்ட் ஜெர்மன் (பிரான்ஸ்) - 636 மில்லியன் யூரோ
இதையும் படிங்க: பார்சிலோனா பயிற்சியாளர் அதிரடி நீக்கம்