ETV Bharat / sports

#LaLiga: ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டிக்கான தேதி இதுதான்...

மாட்ரிட்: 'லா லிகா' கால்பந்து தொடரில் பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், போட்டி நடைபெறும் புதிய தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

La Liga
author img

By

Published : Oct 19, 2019, 1:58 PM IST

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்திலும் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பார்சிலோனா நகரில் உள்ள கேம்ப் நௌ மைதானத்தில் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

பரம எதிரிகளான ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதும் இப்போட்டியை எல் கிளாஸிகோ என்று அழைக்கின்றனர். நடப்பு சீசனில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் போட்டி என்பதால் அதை எதிர்நோக்கி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் வட கிழக்கு ஸ்பெயினின் கேட்டலோனியா பகுதி மக்கள் தனி நாடு வேண்டும் எனக்கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முயற்சி அரசுக்கு எதிரானது என்று 12 பிரிவினைவாத தலைவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது. மேலும் புதிய தேதியை முடிவு செய்யுமாறு ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளுக்கு அறிவுறத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. முன்னதாக போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றலாம் என்று ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இரு அணி நிர்வாகமும் மறுப்பு தெரிவித்தது.

La Liga
ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி

ஏனெனில் கேம்ப் நௌ மைதானம் பார்சிலோனா அணியின் உள்ளூர் மைதானமாகும். இதனால் போட்டியை அங்கு தான் நடத்தவேண்டும் என்று அணி நிர்வாகத்தினர் விரும்பினர். மேலும் இப்போட்டி டிசம்பர் ஏழாம் தேதி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் இரு அணிகளுக்கும் பிற அணியுடனான போட்டி உள்ளதால் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது இரு அணியினரும் டிசம்பர் 18ஆம் தேதி இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேதிகள் குறித்த செய்தியை வரும் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தின் போது ஸ்பானிஷ் கூட்டமைப்பில் தெரிவிக்கப்படவுள்ளது. அதிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால் போட்டியை நடத்தும் லா லிகா கமிட்டி போட்டிக்கான தேதியை அறிவிக்கும். இந்த புதிய அறிவிப்பால் ஸ்பெயினின் கால்பந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Intro:Body:

Barcelona and Real Madrid propose December date for rescheduled El Clasico

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.