சர்வதேச கால்பந்து விளையாட்டில் முறைகேடுகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(ஃபிஃபா) ஆயுள் தடை விதித்துள்ளது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது பணமோசடி, அணிக்கெதிராக சதி செயல்களில் ஈடுபட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த நபர்கள் மீதான விசாரணை நேற்று (ஜூலை8) முதன்மை விளையாட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது முன்னாள் பிரேசில் கால்பந்து அணியின் முதலாளி ரிக்கார்டோ டீக்சீரா(Ricardo Teixeira), சிஏஎஸ் சான்றுகள் துல்லியமானதாக உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினர்.
இதுகுறித்து அவர் செய்த மேல்முறையீட்டில், தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையில் சூழ்ச்சி நடந்திருப்பதாகவும், என் மீது சிஏஎஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் தகுந்த சான்றுகள் உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
ரிக்கார்டோ டீக்சீராவின் மேல்முறையீட்டை ஏற்ற நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டடுள்ள அனைவரது மேல்முறையீடுகளையும் இந்தாண்டு அல்லது 2021ஆம் ஆன்டிற்குள் முடிக்கப்பதும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 117 நாள்களுக்கு பின் நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி; இங்கிலாந்து பேட்டிங்!