இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, நார்த் ஈஸ்ட் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியும் அட்டாக், டிஃபென்ஸ் என இரு பிரிவுகளிலும் அசத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலேதுமின்றி சமநிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளாலும் கோல் ஏதும் அடிக்கமுடியாத காரணத்தால், இஞ்சூரி டைம்( injury-time) எனப்படும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஏடிகே ஆணியின் பல்வாந்த், ஆட்டத்தில் 90+5'ஆம் நிமிடத்தில் ஏடிகே அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் ஏடிகே அணி 27 புள்ளிகளுடன், ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜசிசி விதிமுறைப்படி மாற்றுவீரர்கள் - ஐபிஎல் 2020இன் சர்ப்ரைஸ்