ETV Bharat / sports

ஐஎஸ்எல் கால்பந்து - கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர்களுக்கு தடை - கால்பந்து பயிற்சியாளர்களுக்கு தடை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள கொல்கத்தா(ஏடிகே), கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகளின் பயிற்சியாளர்களுக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.

Antonio Habas, Eelco Schattorie, atk kerala blasters coach

author img

By

Published : Jan 27, 2020, 1:53 PM IST

இந்தியன் சூப்பர் லீக் என்றழைக்கப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதனிடையே ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற 58ஆவது லீக் போட்டியில், ஏடிகே (கொல்கத்தா) - கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின .

அப்போட்டியில் விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக, ஏடிகே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டனியோ ஹபாஸ், அந்த அணியின் கோல் கீப்பிங் பயிற்சியாளர் ஏஞ்சல் பிண்டாடோ, கேரளா பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர் ஈல்கோ ஷாட்டோரி ஆயோருக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்குமுறை கமிட்டி அறிவித்துள்ளது.

இதில் ஏடிகே அணியின் ஹாபஸிற்கு ஒரு லட்சம் ரூபாய், கோல் கீப்பிங் பயிற்சியாளர் பிண்டாடோவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடந்த போட்டியில் தடையை அனுபவித்துவிட்டதால், ஏடிகே - நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியிலும் இருவரும் அணி சார்ந்த விஷயங்களில் தலையிடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கேரளா பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர் ஈல்கோ ஷாட்டோரிக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை, ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தகுதியானவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்லை' - மல்யுத்த வீராங்கனை வேதனை

Intro:Body:

ATK coach suspended from ISL

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.