ப்ரீமியர் லீக் தொடரில் நட்சத்திர அணியான ஆர்சனல் அணியை எதிர்த்து ஆஸ்டன் வில்லா அணி ஆடியது. இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் புகாயோ உதைத்த பந்து, ஓன் கோலாக மாறியது. இதனால் ஆஸ்டன் வில்லா அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.
இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் வேறு எந்த கோல்களும் அடிக்கவில்லை. பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா அணியின் வாட்கின்ஸ் 72 மற்றும் 75 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடிக்க, 3-0 என ஆஸ்டன் வில்லா முன்னிலை பெற்றது.
பின்னர் ஆஸ்டன் அணி வீரர்கள் ஆட்டத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் ஆர்சனல் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா அணி வீழ்த்தியது.
மேலும் எட்டு போட்டிகளில் ஆடிய ஆர்சனல் அணி, நான்கு போட்டிகளில் தோல்வியடைந்ததால் புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணியின் நிலையை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கண்டுகொள்ளலாம்: சுமித்