நடப்பு சீசனுக்கான இங்லிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஆர்சனல் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. ஆர்சனல் அணியின் சொந்த மைதானமான எமிரேட்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் ஆர்சனல் முதல் கோல் அடித்து அசத்தியது. ஆர்சனல் அணியின் முன்கள வீரர் நிக்கோலஸ் பேப்பே (Nicholas Pepe) மிரட்டலான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.
-
✅ Day two of 2020
— Arsenal (@Arsenal) January 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
And if day one was anything to go by, it's going to be a good one 😄#ARSMUN highlights for your enjoyment 👇 pic.twitter.com/pGPARmgXse
">✅ Day two of 2020
— Arsenal (@Arsenal) January 2, 2020
And if day one was anything to go by, it's going to be a good one 😄#ARSMUN highlights for your enjoyment 👇 pic.twitter.com/pGPARmgXse✅ Day two of 2020
— Arsenal (@Arsenal) January 2, 2020
And if day one was anything to go by, it's going to be a good one 😄#ARSMUN highlights for your enjoyment 👇 pic.twitter.com/pGPARmgXse
இதைத் தொடர்ந்து, முதல் பாதி முழுவதுமே ஆர்சனல் அணி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக, 42ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணிக்கு வழங்கப்பட்ட கார்னர் கிக் வாய்ப்பை அந்த அணியின் டிஃபெண்டர் சாக்ரடிஸ் பபஸ்ததோபோலஸ் (Sokratis Papastathopoulos) கோல் அடித்து மிரட்டினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் அடிக்க முடியாதவாறு ஆர்சனல் அணி சிறப்பாக டிஃபெண்டிங் செய்தது.
இறுதியில், ஆர்சனல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம், 87 நாட்களுக்குப் பிறகு ஆர்சனல் அணி தங்களது சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதுமட்டுமின்றி, ஆர்சனல் அணியின் புதிய பயிற்சியாளராகப் பதவியேற்ற மைக்கேல் அகர்டா, தலைமை வகித்த நான்காவது போட்டியிலேயே தனது முதல் வெற்றியைக் கண்டுள்ளார்.
-
FULL-TIME Arsenal 2-0 Man Utd
— Premier League (@premierleague) January 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Goals from Pepe and Sokratis give Arsenal their first home win since October #ARSMUN | @Arsenal pic.twitter.com/Fea03Iqo4T
">FULL-TIME Arsenal 2-0 Man Utd
— Premier League (@premierleague) January 1, 2020
Goals from Pepe and Sokratis give Arsenal their first home win since October #ARSMUN | @Arsenal pic.twitter.com/Fea03Iqo4TFULL-TIME Arsenal 2-0 Man Utd
— Premier League (@premierleague) January 1, 2020
Goals from Pepe and Sokratis give Arsenal their first home win since October #ARSMUN | @Arsenal pic.twitter.com/Fea03Iqo4T
இந்த வெற்றியின்மூலம், ஆர்சனல் அணி நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் ஆறு வெற்றி, ஒன்பது டிரா, ஆறு தோல்வி என 27 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், மான்செஸ்டர் யுனைடெட் அணி 21 ஆட்டங்களில் எட்டு வெற்றி, ஏழு டிரா, ஆறு தோல்வி என 31 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: 2019 Football: மெஸ்ஸி, இந்தியன் ஃபிபா தாத்தா, என ரசிகர்களின் உணர்வுகள் நிரம்பிய தருணங்கள்!