பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன், நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று (டிச.23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாம்ஷெட்பூர் அணிக்கு நட்சத்திர வீரர் ஸ்டீபன் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் கோலடித்து உதவினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
-
Igor's injury-time strike gives the Gaurs a much-needed win at Tilak Maidan! 🤩#RiseAgain #JFCFCG #HeroISL pic.twitter.com/bfq3xzigsg
— FC Goa (@FCGoaOfficial) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Igor's injury-time strike gives the Gaurs a much-needed win at Tilak Maidan! 🤩#RiseAgain #JFCFCG #HeroISL pic.twitter.com/bfq3xzigsg
— FC Goa (@FCGoaOfficial) December 23, 2020Igor's injury-time strike gives the Gaurs a much-needed win at Tilak Maidan! 🤩#RiseAgain #JFCFCG #HeroISL pic.twitter.com/bfq3xzigsg
— FC Goa (@FCGoaOfficial) December 23, 2020
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஃப்சி கோவா அணிக்கு ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய நட்சத்திர வீரர் ஈகோர் அங்குலோ, அதனை கோலாக மாற்றி, ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து ஆட்டத்தில் கிடைத்த கூடுதல் நேரமான 90+5ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஈகோர் அங்குலோ மீண்டும் ஒரு கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
இதையும் படிங்க:ஜெர்மன் கோப்பை: பிரவுன்ச்வீக்கை வீழ்த்தி டார்ட்மவுண்ட் அசத்தல் வெற்றி!