ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், அயாக்ஸ் (நெதர்லாந்து)- யுவன்டஸ் (இத்தாலி) அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டி யுவன்டஸ் அணியின் அலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதற்கட்ட காலிறுதிப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால், நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிலேயே ஈடுபட்டனர். வழக்கம்போல் யுவன்டஸ் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ 28ஆவது நிமிடத்தில் ஹெட்டர் (Header) முறையில் கோல் அடித்து அசத்தினார்.
பின்னர், அதற்கு பதலடி கொடுக்கும் வகையில் 34ஆவது நிமிடத்தில் அயாக்ஸ் அணியின் டோனி வான் டி பீக் ( Donny van de beek) கோல் அடித்தார். இதனால், முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது.
இதையடுத்து, தொடங்கிய இரண்டாம் பாதியில் இரு அணியினரும் தங்களுக்கு கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்புகளை வீணடித்தனர். பின்னர் 67ஆவது நிமிடத்தில் அயாக்ஸ் அணியின் டி லிஜிட் (De Ligt) ஹெட்டர் முறையில் கோல் அடித்தார். இதனால், அயாக்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதன்பின் யுவன்டஸ் அணிக்கு பதில் கோல் அடிப்பதற்கு 23 நிமிடங்கள் இருந்தாலும் பதற்றம் அதிகமாகவே இருந்தது.
இதுபோன்ற சூல்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் போக்கை முற்றிலும் தன் பக்கம் மாற்ற்ககூடியவர் ரொனால்டோ. ஆனால், நேற்றையப் போட்டியில் அவரால் இந்த மேஜிக்கை செய்ய முடியாமல்போனது. அந்த அளவிற்கு அயாக்ஸ் அணி இறுதிக் கட்டத்தில் டிஃபென்டிங்கில் வலுவாக இருந்தது.
இறுதியில் அயாக்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் யுவன்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதன் மூலம் நடந்து முடிந்த இரண்டு கட்ட காலிறுதிப் போட்டிகளிலும் அயாக்ஸ் அணி கோல் விதிமுறைகளில் 3-2 என்ற கணக்கில் யுவன்டஸ் அணியிடம் வெற்றிபெற்றதால், 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு சென்றது.
-
1⃣9⃣9⃣7⃣ AJAX = SEMI-FINALISTS ✔️
— UEFA Champions League (@ChampionsLeague) April 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
2⃣0⃣1⃣9⃣ AJAX = SEMI-FINALISTS ✔️#UCL pic.twitter.com/N1Q9QPw07p
">1⃣9⃣9⃣7⃣ AJAX = SEMI-FINALISTS ✔️
— UEFA Champions League (@ChampionsLeague) April 16, 2019
2⃣0⃣1⃣9⃣ AJAX = SEMI-FINALISTS ✔️#UCL pic.twitter.com/N1Q9QPw07p1⃣9⃣9⃣7⃣ AJAX = SEMI-FINALISTS ✔️
— UEFA Champions League (@ChampionsLeague) April 16, 2019
2⃣0⃣1⃣9⃣ AJAX = SEMI-FINALISTS ✔️#UCL pic.twitter.com/N1Q9QPw07p
இம்முறை நிச்சயம் யுவன்டஸ் அணியை ஐரோப்பா சாம்பியின்ஸ் லீக் கோப்பையை வென்றுத் தருவதற்காகவே, தான் ரியல் மேட்ரிட் அணியில் இருந்து யுவன்டஸ் அணிக்கு விளையாட மாறியதாக ரொனால்டோ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அயாக்ஸ் அணியின் விஸ்வரூபமான ஆட்டத்தால் ரொனால்டோ மட்டுமின்றி யுவன்டஸ் அணியின் சாம்பியன்ஸ் லீக் கோப்பை கனவு பலிக்காமல் போனது.