ETV Bharat / sports

கரோனா வைரஸால் சென்னை சிட்டி போட்டிகள் ஒத்திவைப்பு!

கரோனா வைரஸ் காரணமாக சென்னை சிட்டி அணி பங்கேற்கும் ஏஎஃப்சி கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

AFC Cup: Chennai City's matches deferred due to coronavirus

author img

By

Published : Mar 18, 2020, 10:28 PM IST

கடந்த ஐ லீக் சீசனை சென்னை சிட்டி எஃப்சி அணி வென்றதால், நடப்பு சீசனுக்கான ஏஎஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) கால்பந்து கோப்பை தொடருக்கு தகுதிபெற்றது. சென்னை சிட்டி எஃப்சி அணி, மாலத்தீவை சேர்ந்த மசியா, டி.சி. ஸ்போர்ட்ஸ் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பஷூந்தரா கிங்ஸ் அணியுடன் குரூப் இ பிரிவில் இடம்பெற்றிருந்தது.

இதில், கடந்த 11ஆம் தேதி மசியா அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் சென்னை அணி விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை அணி வரும் ஏப்ரல் 15இல் டி.சி. ஸ்போர்ட்ஸ் அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 29ஆம் தேதி பஷூந்தரா கிங்ஸ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தவிருந்தது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் அடுத்த மாதம் இறுதிவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: யுவண்டஸ் அணியின் மற்றொரு வீரருக்கும் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.