ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் கிளப் அணிகளுக்கு இடையேயான ஏஎஃப்சி கோப்பைத் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் -இ பிரிவில் இடம்பெற்றுள்ள சென்னை சிட்டி எஃப்சி அணி, மலாத்தீவ்ஸ் கிளப் அணியான மாசியாவை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் அடோல்போ மிராண்டா (Adolfo Miranda) ஆட்டத்தின் 11’ஆவது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மாசியா அணியின் முகமது இர்ஃபான் 64’ஆவது நிமிடத்திலும், இப்ராஹிம் மஹுதீ 67’ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்து, சென்னை அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.
-
🎥 WATCH | 🇮🇳 @ChennaiCityFC 2-2 @MaziyaSR 🇲🇻
— #AFCCup2020 (@AFCCup) March 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
👏 Debutants Chennai scored late to secure a point against Maziya as the sides kicked off their Group E campaigns in entertaining fashion. #AFCCup2020 pic.twitter.com/Kq6itZJYNn
">🎥 WATCH | 🇮🇳 @ChennaiCityFC 2-2 @MaziyaSR 🇲🇻
— #AFCCup2020 (@AFCCup) March 11, 2020
👏 Debutants Chennai scored late to secure a point against Maziya as the sides kicked off their Group E campaigns in entertaining fashion. #AFCCup2020 pic.twitter.com/Kq6itZJYNn🎥 WATCH | 🇮🇳 @ChennaiCityFC 2-2 @MaziyaSR 🇲🇻
— #AFCCup2020 (@AFCCup) March 11, 2020
👏 Debutants Chennai scored late to secure a point against Maziya as the sides kicked off their Group E campaigns in entertaining fashion. #AFCCup2020 pic.twitter.com/Kq6itZJYNn
அதனையடுத்து ஆட்டத்தின் இறுதி நிமிடமான 90’ஆவது நிமிடத்தில் சென்னையின் மிராண்டா மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் ‘டை’ என அறிவிக்கப்பட்டது.
மேலும் குரூப் -இ கான புள்ளிப்பட்டியலில் சென்னை சிட்டி எஃப்சி அணி ஒரு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், மாசியா அணி ஒரு புள்ளியுடன் மூன்றாமிடத்தையும் தக்கவைத்து கொண்டது.
இதையும் படிங்க:கொரோனா பீதி: மான்செஸ்டர் சிட்டி - ஆர்சனல் போட்டி தள்ளிவைப்பு!