ETV Bharat / sports

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா பந்துவீச்சை விளாசும் ஆஸ்திரேலியா!! - ksbharat

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 327 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

WTC Final உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா பந்துவீச்சை விளாசும் ஆஸ்திரேலியா

author img

By

Published : Jun 7, 2023, 5:25 PM IST

Updated : Jun 7, 2023, 10:51 PM IST

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவிக்கும் இரண்டு அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது.

இதன்பின் 2021 முதல் 2023 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67% சதவித புள்ளிகளுடன், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் என இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இந்திய அணி ஏற்கனவே கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூஸிலாந்திடம் கடந்த 2021ஆம் ஆண்டு இழந்த நிலையில் இந்த முறை கைப்பற்ற போராடும். அதே வேளையில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி சாமியன்ஷிப்பை கைப்பற்ற போராடும் என்பதால் இறுதி போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய முகமது ஷமி பந்துவீச்சில் அனல் பறந்தது. முகமது சிராஜும் 140 கி.மீ., வேகம் குறையாமல் பதை சுவிங் செய்தார். பொறுமையாக ஆட்டத்தைத் தொடங்கிய கவாஜா, சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் வார்னருடன் லம்புஷனே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தது.

வார்னர் ஒரு பக்கம் அதிரடி காட்ட லம்புஷனே பொறுமையாக ஆடி வருகிறார். பந்துவீச்சில் மாற்றம் செய்து தாக்கூரை ரோகித் பந்துவீச அழைத்தார். இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட் பரத்தின் அபார கேட்ச்சில் வார்னர் அவுட்டானார். வார்னர் 60 பந்துகளில் அதிரடியாக ஆடி 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பந்திலேயே ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷமி வீசிய முதல் பந்திலேயே லம்புஷானே போல்டானார். பின்னர் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், ஸ்டிவ் ஸ்மித் ஜோடி பொறுமையாக ஆடியது. ஒரு பக்கம் ஸ்டிவ் ஸ்மித் பொறுமையாக ரன்கள் சேர்க்க ஹெட் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

ஷமி வீசிய 64வது ஓவரில் டிராவிஸ் ஹெட் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் இமாலய இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்தியா அணி நாளை ஆட்ட தொடக்கத்திலிருந்து ஆஸ்திரேலியா விக்கெட்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதையும் படிங்க: தேனியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் வருவார்கள் - வருண் சக்கரவர்த்தி!

Last Updated : Jun 7, 2023, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.