ETV Bharat / sports

WTCfinal: விறுவிறுப்பான கட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி… கம்பேக் கொடுக்குமா இந்தியா? - steven smith

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 9, 2023, 10:57 PM IST

லண்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்தில் மோதி வருகின்றன. நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடன் துவங்கினர்.

ஆஸ்திரேலியா வேகப் பந்துவீச்சாளர் போலண்ட் வீசிய முதல் ஓவரிலேயே பரத் போல்டானார். பின்னர் களமிறங்கிய தாக்கூர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கவாஜா தவறவிட்டார். பின்னர் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களாக வீசினர். கேப்டன் கம்மின்ஸ் வீசிய ஆக்ரோஷமான பவுன்சர் தாக்கூர் விரலை பதம் பார்த்தது.

பின்னர் ரகானே - தாக்கூர் ஜோடி பொறுமையாக ரன்கள் சேர்க்க தொடங்கியது. ஆனால் அவ்வப்போது இருவரும் பவுண்டரிகளை விரட்டவும் தவறவில்லை. கம்மின்ஸ் ஓவரில் சிக்ஸர் அடித்து ரஹானே அரைசதம் அடித்தார். மறுமுனையில் தாகூரும் ரஹானேவுக்கு நல்ல கம்பெனி கொடுக்க இந்திய அணியின் ஸ்கோர் அதிகரித்தது. 55வது ஓவரில் ரஹானே கொடுத்த கேட்சை முதல் ஸ்லிப்பில் இருந்த வார்னர் தவறவிட்டார்.

ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் லியான் ஓவரில் ரஹானே பவுண்டரிகளாக விளாசினார். இந்திய அணி 7வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது. சதத்தை நெருங்கி கொண்டிருந்த ரஹானே கம்மின்ஸ் ஓவரில் கல்லி திசையில் இருந்த கிரீன் பிடித்த அற்புதமான கேட்ச்சில் 89 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய உமேஷ் யாதவ் வந்த வேகத்தில் பவுண்டரி அடித்து, கம்மின்ஸ் பந்தில் போல்டானார். இந்த பவுண்டரி மூலம் இந்தியா அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது. அடுத்து களமிறங்கிய ஷமி போலண்ட் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். தாக்கூர் மிட் ஆஃபில் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 4வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் அதே ஓவரில் அவுட் ஆனார்.

அடுத்ததாக ஷமி, ஸ்டார்க் வீசிய பந்தில் அவுட்டாக இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க், போலண்ட் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இந்திய அணி ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 173 ரன்கள் பின் தங்கியிருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவிற்கு எடுத்த எடுப்பிலேயே சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். சிராஜ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 1 ரன்னில் அவுட்டானார். 5வது ஓவரில் லம்பூஷேனேவை ரன் அவுட்டக்கும் வாய்ப்பை கில் தவறவிட்டார். பின்னர் சற்று அதிரடி காட்டிய கவாஜா, உமேஷ் யாதவ் வீசிய பந்தில் 13 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ஸ்மித் - லம்புஷேனே ஜோடி வேகமாக ரன்கள் சேர்த்தது.

34 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு ஜடேஜா வீசிய பந்தில் தாக்கூர் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். வந்த வேகத்தில் 2 சிக்ஸர்கள் விளாசிய ஹெட், ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலியா அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 123 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து 296 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.

இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி குறைந்தது 400 ரன்களாவது இலக்கு நிர்ணயிக்கும் நோக்கில் விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இந்திய பவுலர்களும் விக்கெட்கள் கைப்பற்றி வருவதால் இரு அணிகளுக்கும் வெற்றி பெறும் வாய்ப்பு சமநிலையில் உள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசி போன்று நானும் வரவேண்டும் - சாய் சுதர்சன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.