ETV Bharat / sports

மனைவியின் ஆட்டத்தை காண தொடரிலிருந்து விலகிய ஸ்டார்க்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், மகளிர் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள அவரது மனைவி அலீசா ஹீலியின் ஆட்டத்தைக் காண்பதற்காக தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Women's T20 WC: Starc cuts short SA tour, to watch wife in final

author img

By

Published : Mar 6, 2020, 4:52 PM IST

Updated : Jun 28, 2022, 3:35 PM IST

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆடவர் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் அணியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ஸ்டார்க் தனது சொந்த மண்ணில் மனைவி அலீசா ஹீலி உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடுவதை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதனால் இப்போட்டியிலிருந்து விலகுவதற்கு நாங்கள் அனுமதியளித்துள்ளோம். ஏனெனில் இது அவருடைய வாழ்நாளில் மறக்க முடியா நிகழ்வாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த அணுமதியை வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

  • JUST IN: Australian paceman Mitchell Starc will miss Saturday’s final ODI against South Africa as he travels to Melbourne for the #T20WorldCup for a "once in a lifetime opportunity to watch Alyssa in a home World Cup final." pic.twitter.com/QYKft2u00X

    — T20 World Cup (@T20WorldCup) March 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இத்தொடரில் ஹசில்வுட், ரிட்சர்ட்சன், கேன் ரிட்சர்ட்சன் ஆகியோரு பென்ச்சில் உள்ளனர். தற்போது ஸ்டார்க் விலகியுள்ளதால் நாளைய போட்டியில் இவர்களுள் ஒருவருக்கு வாய்ப்பளிக்க இயலும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் அறிவிப்பு

Last Updated : Jun 28, 2022, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.