சென்னை: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை தொடரின், 26வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்பெரிக்கா அணிகள் மோதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னையில் நடைபெறும் நடப்பாண்டு உலக கோப்பையின் கடைசி போட்டி என்பதால், இந்த போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும், ஜம்மு காஷ்மீர், நாசிக், கொல்கத்தா, பெங்களூர், விஜயவாடா போன்ற நகரங்களில் இருந்து ரசிகர்கள் வந்து உள்ளனர்.
இது குறித்து ரசிகர்கள் கூறுகையில், "ஒரு கிரிக்கெட் ரசிகர்களாக இப்போடியை காண வந்துள்ளோம். இப்போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் அணிக்கு எங்களது பாராடும், ஆதரவும் நிச்சயம் இருக்கும். அதனால் பாகிஸ்தான் அணி வெற்றாலும் சரி, தென் ஆப்பிரிக்கா அணி வெற்றாலும் சரி ஒரு கிரிக்கெட் ரசிகர்களாக எங்களது வாழ்த்துகளும், பாராடுகளும் அவர்களுக்கு இருக்கும் என்றனர்.
மேலும், இது குறித்து தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கூறுகையில்; "தென் ஆப்பெரிக்கா ஒரு சிறந்த அணி. அவர்களுக்கு எப்போது எங்களின் ஆதரவு இருக்கும். இப்போட்டியில் கண்டிபாக தென் ஆப்பிரிக்கா அணி வெல்லும். இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் ஆட்டம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்" என்றனர்.
சென்னையில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்: தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்தியா ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து கொண்டு அந்த அணிக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் அணி தனது நிதான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்றவுடன், ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி தங்களை வாழ்த்துகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், ஷதாப் கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.
இதையும் படிங்க: பாரா ஆசிய விளையாட்டு போட்டி; தங்கப் பதக்கங்களை வேட்டையாடும் இந்திய வீரர்கள்!