ETV Bharat / sports

Wasim Akram : "8 கிலோ இறைச்சியை சாப்பிட்டால்..." - பாக். வீரர்களை சாடிய வாசிம் அக்ரம்! - Cricbuzz

World Cup 2023 : பாகிஸ்தான் வீரர்கள் உடற்தகுதியில் மோசமாக உள்ளதாகவும் நாள்தோறும் 8 கிலோ இறைச்சியை சாப்பிட்டது போன்று காணப்படுவதாகவும் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Wasim Akram
Wasim Akram
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 7:31 PM IST

ஐதராபாத் : நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் மோசமான உடற்தகுதியை காட்டி வருவதாகவும், நாளொன்றுக்கு 8 கிலோ இறைச்சியை சாப்பிட்டவர்கள் போல் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளதாகவும் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக சாடி உள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சற்றும் எதிர்பாராத ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன. நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணி பெரிதும் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.

அதேபோல் மற்றொரு ஆட்டமாக முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி அதிர்ச்சியை அளித்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று (அக். 23) நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை பாகிஸ்தான் அணி கண்டது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றி பாகிஸ்தான் அணி கண்ட மிக மோசமான தோல்வி என வர்ணனை செய்யப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதி குறித்து முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக சாடி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களின் மோசமான உடற்தகுதியை ஆடுகளத்தில் காண முடிந்ததாகவும், நாளொன்றுக்கு 8 கிலோ இறைச்சியை சாப்பிட்டது போல் பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடுகள் காணப்பட்டதாகவும் வாசிம் அக்ரம் விமர்சித்து உள்ளார்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டம் தனக்கு சங்கடமாக இருந்ததாகவும், பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதியை பார்கையில் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி சோதனைகள் ஏதும் செய்யவில்லை போலும் என்றும் தெரிவித்தார். மேலும் வீரர்களின் முகங்கள் எட்டு கிலோ மெதுவாக சமைத்த இறைச்சியை சாப்பிட்டது போல் தெரிவதாகவும் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தொழில்முறை சார்ந்த வீரர்கள் என்றும் அவர்களுக்கு என ஒரு அளவுகோல் இருக்க வேண்டும் என்றும் வாசிம் அக்ரம் தெரிவித்தார். மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளராக இருந்த போது, வீரர்களின் உடற்பயிற்சிக்கு சரியான அளவுகோல்கள் இருந்ததாகவும் ஆனால் வீரர்கள் அவரை வெறுத்ததாகவும் அதற்கான பலன் தற்போது வெளிக் கொணர்ந்து உள்ளதாகவும் அதை கண்கூட பார்க்க முடிகிறது என வாசிம் அக்ரம் விமர்சித்து உள்ளார்.

புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 27ஆம் தேதி அதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க : உலக சாம்பியனுக்கு நேர்ந்த கதி! வீழ்ச்சியில் இருந்து மீளுமா இங்கிலாந்து?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.