நியூ டெல்லி: பிரபல தனியார் தொலைக்காட்சி உரையாடலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், ஆல் ரவுண்டருமான ரவி சாஸ்திரி ”விராட் கோலி பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் களமிறங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இஷான் கிஷன் டாப் ஆர்டரில் ஓப்பனிங் பேட்ஸ்மனாக களமிறங்க வேண்டும்.
கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் புதிய பேட்டிங் இடத்திற்கு தங்களை மாற்றி கொள்ள வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் கீழ் வரிசையை பலப்படுத்த விராட் கோலி கீழ் வரிசையில் களமிறங்க வேண்டும். ரோகித் கேப்டனாக நல்ல அனுபவம் பெற்றுள்ளார். பேட்டிங் வரிசையில் மூன்று அல்லது நான்காவது இடத்திலும் களமிறங்குவார். இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரில் ஒருவருக்கு என நிரத்தர இடமில்லை” என்றார்.
”கடைசியாக 2019இல் நடந்த உலக கோப்பையின் போது நான் தலைமை பயிற்சியாளராக இருந்தேன். அப்போது கோலியிடம் பேட்டிங் வரிசையில் கீழே இறங்குவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என நினைத்தேன். டாப் ஆர்டர் அதிக பலம் வாய்ந்ததாக உள்ளது. அவர்களில் ஒருவரை கீழ் வரிசையில் பயன்படுத்தி கொள்ள திட்டம் வைத்திருந்தேன். இந்திய அணியின் டாப் ஆர்டர் சரிந்தால் கீழ் வரிசை தடுமாறுகிறது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மெனின் அனுபவம் கீழ் வரிசைக்கு தேவை. விராத் கோலியின் ரெக்கார்கள் நான்காவது பேட்ஸ்மெனாக களமிறங்கும் போது அபாரமாக உள்ளது” என ரவி சாஸ்திரி கூறினார். விராத் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கும் போது, 210 இன்னிங்ஸில், 60.20 சராசரியுடன் 10,777 ரன்கள் அடித்துள்ளார்.
அதில் 39 சதங்களும் 55 அரைசதங்களும் அடங்கும். விராத் கோலி பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திலும் அதிக ரன்களை குவித்துள்ளார். 39 இன்னிங்ஸில் 55.21 சராசரியுடன் 1,767 ரன்கள் அடித்துள்ளார். இதில் 7 சதங்களும் 8 அரைசதங்கலும் அடங்கும்.
இதையும் படிங்க: ஃபிடே செஸ் உலக கோப்பை: குகேஷை விழ்த்திய கார்ல்சன்!