ETV Bharat / sports

U19 Worldcup 2022: இறுதிப்போட்டியில் இந்தியா; அடங்கியது ஆஸ்திரேலியா - உலகக்கோப்பை செய்திகள்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

U19 Worldcup 2022
U19 Worldcup 2022
author img

By

Published : Feb 3, 2022, 1:48 AM IST

Updated : Feb 3, 2022, 2:11 AM IST

அன்டிகுவா: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகளில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றன.

இதில், நேற்று (பிப். 2) நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது போட்டி அன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று (பிப். 2) மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.

200 ரன்கள் பார்டனர்ஷிப்

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் தூல் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். தொடக்க வீரர்களான ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் விரைவாக தங்களது விக்கெட்டை இழக்க, ஷேக் ரஷீத் உடன் கேப்டன் யாஷ் தூல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இந்த ஜோடி ஏறத்தாழ 33 ஓவர்கள் விளையாடி 204 ரன்களை குவித்தது. கேப்டன் யாஷ் தூல் 110 ரன்களிலும், ரஷீத் 94 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அவர்கள் வெளியேறிய பின்னரும் ராஜ்வர்தன், நிஷாந்த் சிந்து, தினேஷ் பானா ஆகியோர் சற்று அதிரடி காட்டி ஆஸ்திரேலிய அணிக்கு 291 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.

வெற்றியைத் தேடி தந்த விக்கி

ஆஸ்திரேலிய பந்துவீச்சு சார்பில் ஜோக் நிஸ்பெட், வில்லியம் சால்ஸ்மேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டைகளை கைப்பற்றினர். இதன்பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய ஓப்பனர்களில் ஒருவரான வைல்லி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மற்றொரு ஓப்பனரான கேம்ப்பெல் கெல்லாவே, கோரே மில்லருடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி 68 ரன்களை எடுத்தபோது, மில்லர் 38 ரன்களும், கெல்லாவே 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களுக்கு பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமையவில்லை. லாச்சியன் ஷா மட்டும் அரைசதம் கடந்த நிலையில், மற்ற அனைவரும் சோபிக்க தவறிவிட்டனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி 41.5 ஓவர்களில் 194 ரன்களை மட்டும் எடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. விக்கி ஒஸ்ட்வல் 3 விக்கெட்டுகளையும், நிஷாந்த் சிந்து, ரவி குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தியாவின் 8ஆவது இறுதிப்போட்டி

இதன்மூலம், இந்தியா 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு மீண்டும் முன்னேறியுள்ளது. இந்த வெற்றியுடன், எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள இந்திய அணி, தொடர்ந்து நான்காவது முறையாக (2016, 2018, 2020, 2022) இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

2000ஆம் ஆண்டு முகமது கைஃப் தலைமையிலும், 2008ஆம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலும், 2016இல் உன்முக்த் சந்த தலைமையிலும், 2018இல் பிருத்வி ஷா தலைமையிலும் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டி: இங்கிலாந்து vs இந்தியா - பிப்ரவரி 5ஆம் தேதி - இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும்

ஒளிப்பரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 ஹெச்டி

இதையும் படிங்க: IND vs WI: இந்திய அணியினருக்கு கரோனா; ஸ்ரேயஸ், ருதுராஜ், தவாணும் பாதிப்பு

Last Updated : Feb 3, 2022, 2:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.