ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பை... ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... ஆல் ரவுண்டர் டிம் டேவிட்டிற்கு அணியில் இடம்... - ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டரான டிம் டேவிட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Tim
Tim
author img

By

Published : Sep 1, 2022, 6:10 PM IST

சிட்னி: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இதில் 16 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் நேரடியாக "சூப்பர் 12" சுற்றில் விளையாடுகின்றன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடவுள்ளன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று(செப்.1) அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஆரோன் பின்ச் மற்றும் துணை கேப்டனாக பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட, அதேநேரம் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற ஆல் ரவுண்டரான டிம் டேவிட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மாத் வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா ஆகிய வீரர்களும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் டிம் ஆடுகிறார். இம்மாத இறுதியில் இந்தியாவில் நடக்கும் டி20 தொடரில் தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக கேமரூன் கிரீன் விளையாடுகிறார்.

இதையும் படிங்க: ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.