மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் தொண்டு நிறுவனம், விவசாயி ஒருவரின் மகளுடைய மருத்துவப் படிப்புக்கு உதவியுள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் தீப்தி விஸ்வாஸ்ராவ். இவரின் தந்தை ஒரு விவசாயி. தீப்திக்கு மருத்துவராக வேண்டும் என்று ஆசை. ஆனால், பொருளாதார சூழலால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால், சச்சினின் தொண்டு நிறுவனம் அவரின் மருத்துவ படிப்பிற்கு நிதி அளித்து உதவி செய்துள்ளது.
உழைப்பிற்கான பரிசு
இதுகுறித்து காணொலி வெளியிட்டுள்ள தீப்தி, "என்னுடைய தந்தை ஒரு விவசாயி. தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது. கடின உழைப்பிற்கான பரிசு இது. என்னுடைய கல்விக்கு சச்சின் டெண்டுல்கரின் தொண்டு நிறுவனம் நிதியளித்து உதவியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
சச்சின் வாழ்த்து
இதற்கு பதிலளித்துள்ள டெண்டுல்கர், "தீப்தியின் வாழ்க்கை கனவுகளை நிஜமாக்கும் கதைகளுக்கு சிறந்த உதாரணம். அவருடைய வாழ்க்கை கதை, மற்றவர்களை தங்கள் கனவுகளை நோக்கிப் பயணிக்க தூண்டும். அவருடைய எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். ரத்னகிரி அருகே சாயர் கிராமத்தை சேர்ந்த தீப்தி, அந்த கிராமத்தின் முதல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: சுத்தி அடித்த தீபிகா குமாரி: கால் இறுதியின் முந்தைய சுற்றுக்குத் தகுதி!