ETV Bharat / sports

டி20 உலக கோப்பை கிரிக்கெட்; 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா - விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் நேற்று (அக்-27) நடந்த போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்த் அணியை வீழ்த்தியது.

Etv Bharatடி20 உலக கோப்பை கிரிக்கெட்; 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

author img

By

Published : Oct 28, 2022, 7:55 AM IST

சிட்னி: டி20 உலகக் கோப்பை நேற்றைய போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றியை உறுதி செய்தது.இந்த வெற்றி மூலம் இந்தியா பி பிரிவில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக அக்-16 ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதிய இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்களுடன் களமிறங்கி த்ரில் வெற்றி அடைந்து அணியின் முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் சிட்னி மைதானத்தில் நேற்று (அக்-27)இந்தியா மற்றும் நெதர்லாந்த் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேன்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

போட்டி தொடங்கியதில் இருந்து 9 ரன்கள் எடுத்த ராகுல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் மற்றும் சூர்யா குமார் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்ட தொடக்கத்தில் பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணியை விராட் 38 பந்துகளில் அரை சதம் அடித்து நிதான படுத்தினார்.இதனையடுத்து 20 ஓவர் முடிவில் இந்திய அணி 179 ரன்களை எடுத்தது.

கோலி அபாரம்
கோலி அபாரம்

இரண்டவாதாக பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்த் அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காராரான விக்ரம்ஜித் சிங் 9 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஓடவுட், லீடு, அக்கர்மன், கூப்பர் மற்றும் பிரின்கிள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் நெதர்லாந்த் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்து படுதோல்வி அடைந்தது.

விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான்கள்: இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் வேகத்தில் நெதர்லாந்து அணி திணறியது. புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான்கள்
விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான்கள்

முடி சூடிய கோலி: முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலேயே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் 82 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். நெதர்லாந்த் அணிக்கு எதிரான இப்போட்டியிலும் அரை சதம் எடுத்து விராட் கோலி சாதனை படைத்தார். மேலும் 44 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ்களுடன் 62 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்து அணிக்கு வலிமை சேர்த்தனர்.

இந்திய அணியின் வீரர்கள் விவரம்:ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(வி.கீ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

நெதர்லாந்த் அணியின் வீரர்கள் விவரம்:ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன்/வி.கீ), விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென் மற்றும் பால் வான் மீகெரென்.

இதையும் படிங்க:டி20 உலகக் கோப்பை: ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாவே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.