ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை: 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.

இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து
இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து
author img

By

Published : Oct 29, 2022, 6:10 PM IST

சிட்னி: 8ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றனர். அதன்படி சிட்னியில் இன்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் கள்மிறங்கிய வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேறினாலும், கிளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ரன்கள் விளாசி அணிக்கு பலம் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

இதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசாங்கா 0 ரன், குசல் மெண்டிஸ் 4 ரன், டி சில்வா 0 ரன், அசாலங்கா 4 ரன் என ஒற்றை இலக்கில் ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ராஜபக்ச மற்றும் ஷனகா ஆகியோர் சிறிது நேரம் விளையாடி ரன் சேர்த்தனர். ஆனாலும், நியூசிலாந்த்தின் அபாரமான பந்து வீச்சால் இலங்கை அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட் 4 விக்கெட்டும், சாண்ட்னெர், இஷ் சோதி தலா 2 விக்கெட்டும், சவுதி, பெர்குசன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த தோல்வியால் இலங்கை அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிங்க: நாட்டில் உள்ள ஆடுகளங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன் - பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.