சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசனின் ப்ளே-ஆஃப் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிப்போட்டிக்கு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி தகுதிபெற்றுவிட்டது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இன்று (ஆக. 13) மோதுகின்றன.
சீட்டுக்கட்டுக்காக சரிந்தது
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் கௌசிக் காந்தி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுக்கத் தொடங்கியது.
-
A run out in the final delivery and an all-round bowling effort helps @supergillies bowl out @DindigulDragons for 103.
— TNPL (@TNPremierLeague) August 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Skipper Hari Nishaanth stood firm, top scoring with 56, while Sai Kishore bagged 3/14, Alexandar scalped 2/3.#ShriramCapitalTNPL2021 #CSGvDD #Qualifier2 pic.twitter.com/lJi7HI73EL
">A run out in the final delivery and an all-round bowling effort helps @supergillies bowl out @DindigulDragons for 103.
— TNPL (@TNPremierLeague) August 13, 2021
Skipper Hari Nishaanth stood firm, top scoring with 56, while Sai Kishore bagged 3/14, Alexandar scalped 2/3.#ShriramCapitalTNPL2021 #CSGvDD #Qualifier2 pic.twitter.com/lJi7HI73ELA run out in the final delivery and an all-round bowling effort helps @supergillies bowl out @DindigulDragons for 103.
— TNPL (@TNPremierLeague) August 13, 2021
Skipper Hari Nishaanth stood firm, top scoring with 56, while Sai Kishore bagged 3/14, Alexandar scalped 2/3.#ShriramCapitalTNPL2021 #CSGvDD #Qualifier2 pic.twitter.com/lJi7HI73EL
விமல் குமார் 11 ரன்களிலும், மணி பாரதி, ராஜாமணி ஸ்ரீநிவாசன், விவேக், மோகித் ஹரிஹரன், சுவாமிநாதன், விக்னேஷ் ஆகியோர் ஒற்றை இலக்கத்திலும் வெளியேறினர். மறுமுனையில், கேப்டன் ஹரி நிஷாந்த் ஒற்றை ஆளாக போராடி அரை சதம் அடித்து ஆறுதல் அளித்தார்.
சென்னை நிதானம்
இதன்மூலம், திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், அலெக்ஸாண்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த் (கேப்டன்), விமல் குமார், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், மணி பாரதி, ஆர் விவேக், லக்ஷமிநாராயணன் விக்னேஷ், ராஜாமணி ஸ்ரீநிவாசன், எம்.சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், எஸ். சுவாமிநாதன்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), நாராயணன் ஜெகதீசன், சோனு யாதவ், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரீஷ் குமார், ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷார், மணிமாறன் சித்தார்த், அருண், எஸ்.ராதாகிருஷ்ணன், அலெக்ஸாண்டர்.