ETV Bharat / sports

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை! வெளியான உண்மைக் காரணம்! - BAJRANG PUNIA SUSPEND 4 YEARS

ஊக்கு மருந்து சோதனையில் சிக்கிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை நான்கு ஆண்டுகள் தடை செய்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Bajrang Punia (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 27, 2024, 1:02 PM IST

ஐதராபாத்: தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை 4 ஆண்டுகள் தடை செய்து கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி தேசிய அணிக்கான தேர்வு போட்டியின் போது ஊக்கு மருந்து சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுத்ததை தொடர்ந்து இந்த தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து சோதனைக்கு மாதிரி வழங்க மறுத்ததை தொடர்ந்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் பஜ்ரங் புனியாவை கடந்த ஏப்ரல் 23ஆம் தேடி இடை நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து உலக மல்யுத்த கூட்டமைப்பும் பஜ்ரங் புனியாவை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இடை நீக்கத்தை எதிர்த்து பஜ்ரங் புனியா தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் முறையீடு செய்தார்.

இதையடுத்து பஜ்ரங் புனியா மீதான குற்றச்சாட்டு அறிக்கையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் வெளியிடும் வரை இடை நீக்கத்தை ரத்து செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் நோட்டீஸ் வழங்கியது.

இதனிடையே அண்மையில் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக குற்றச்சாட்டு அறிக்கை தெரிவிக்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி மற்றும் அக்டோபர் 4ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதாக பஜ்ரங் புனியாவை மீண்டும் இடைநீக்கம் செய்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.

இந்த தடைக் காலக்கட்டத்தில் பஜ்ரங் புனியா மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டில் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "தோனியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்"- முன்னாள் சிஎஸ்கே வீரர் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.