சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. இத்தொடரில், நேற்று(ஜூலை.25) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
மாலை போட்டி
நேற்றைய முதல் போட்டியில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவர்களில் 137 ரன்களையே சேர்த்தது. மதுரை அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் கௌசிக் 44 ரன்களை எடுத்தார்.
138 எனும் எளிய இலக்கை துரத்திய திருச்சி அணிக்கு ஆதித்யா கணேஷ் 41, முகமது அட்னான் கான் 53 ரன்களை சேர்க்க, திருச்சி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கை எட்டியது.
-
From 10/3 ➡️Win by 3 wickets!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Poiyamozhi & Saravana Kumar hold their nerve towards the end after Muhammed Adnan Khan (53) & Adithya Ganesh (41) pulled Ruby Trichy Warriors out of early trouble with a 84-run stand.#ShriramCapitalTNPL2021 #SMPvRTW pic.twitter.com/pd6vBzFdSZ
">From 10/3 ➡️Win by 3 wickets!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021
Poiyamozhi & Saravana Kumar hold their nerve towards the end after Muhammed Adnan Khan (53) & Adithya Ganesh (41) pulled Ruby Trichy Warriors out of early trouble with a 84-run stand.#ShriramCapitalTNPL2021 #SMPvRTW pic.twitter.com/pd6vBzFdSZFrom 10/3 ➡️Win by 3 wickets!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021
Poiyamozhi & Saravana Kumar hold their nerve towards the end after Muhammed Adnan Khan (53) & Adithya Ganesh (41) pulled Ruby Trichy Warriors out of early trouble with a 84-run stand.#ShriramCapitalTNPL2021 #SMPvRTW pic.twitter.com/pd6vBzFdSZ
இதன்மூலம், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது திருச்சி. முகமது அட்னான் கான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரவு போட்டி
நேற்று(ஜூலை.25) நடந்த மற்றொரு போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் களமாடிய கோவை கிங்ஸ், ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 201 ரன்களை குவித்து மிரட்டியது. கங்கா ஸ்ரீதர் ராஜ் 90, சுரேஷ் குமார் 58, சாய் சுதர்சன் 40 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
200 எடுத்தும் வீண்
இமாலய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு, கேப்டன் நிஷாந்த், மணி பாரதி ஜோடி சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்துக் கொடுத்தது. இதனால், திண்டுக்கல் அணி 18 ஓவர்கள் முடிவிலேயே 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்து அசால்ட் காட்டியது.
இதன்படி 2 ஓவர்கள் மிச்சமிருக்க, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ். அந்த அணியில் அதிகபட்சமாக மணி பாரதி 81(32), ஹரி நிஷாந்த் 70(37) ரன்களை எடுத்தனர். இந்த போட்டியில் மணி பாரதி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
𝗢𝗻𝗲 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗺𝗼𝗿𝗶𝗲𝘀!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Carnage from Hari Nishaanth (70 from 37b, 6x4,5x6) & Mani Bharathy (81 from 32, 8x4,5x6) secure a historic win for the @DindigulDragons.#ShriramCapitalTNPL2021 #LKKvDD pic.twitter.com/0NHFQeYKsE
">𝗢𝗻𝗲 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗺𝗼𝗿𝗶𝗲𝘀!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021
Carnage from Hari Nishaanth (70 from 37b, 6x4,5x6) & Mani Bharathy (81 from 32, 8x4,5x6) secure a historic win for the @DindigulDragons.#ShriramCapitalTNPL2021 #LKKvDD pic.twitter.com/0NHFQeYKsE𝗢𝗻𝗲 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗺𝗼𝗿𝗶𝗲𝘀!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021
Carnage from Hari Nishaanth (70 from 37b, 6x4,5x6) & Mani Bharathy (81 from 32, 8x4,5x6) secure a historic win for the @DindigulDragons.#ShriramCapitalTNPL2021 #LKKvDD pic.twitter.com/0NHFQeYKsE
திருச்சி டாப்
தற்போது புள்ளிப்பட்டியலில், நேற்று(ஜூலை.25) வெற்றி பெற்ற அணிகளான திருச்சி, திண்டுக்கல் அணிகள் முறையே முதலாவது, ஐந்தாவது இடத்திலும்; தோல்வியுற்ற அணிகளான கோவை, மதுரை அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது இடத்திலும் உள்ளன.
இன்றைய போட்டி
நெல்லை ராயல் கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மோதும் பத்தாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூலை 26) இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிங்க: ND vs SL: இந்தியாவிடம் அடங்கியது இலங்கை; புவனேஷ்வர் அசத்தல்